🎀 அகீதா 🎀
🎤 பாகம் ➖ 24A ⏰ 13:44
📖 பாடம் 6 📖 பக்கம் 11
💢 ஈமானை பாழாக்கும், ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் விஷயங்கள் மூன்று:
❌1⃣ ஷிர்க் ➖ இணை வைப்பு
❌2⃣ குஃப்ர் ➖ நிராகரிப்பு
❌3⃣ நிஃபாக் ➖ நயவஞ்சகம்
❌ ஷிர்குல் அக்பர் ➖ பெரிய ஷிர்க்
💢 ஷிர்க் என்பது மிக பயங்கரமான, அபாயகரமான ஒன்று.
💢 அல்லாஹ் மன்னிக்காத,
💢 அனைத்து அமல்களையும் அழிக்க கூடிய,
💢 நிரந்தரமான நரகத்தைப் பெற்று தரக்கூடிய,
💢 பெரும்பாவங்களில் மிகப் பெரிய பெரும்பாவம்.
🔴 ஷிர்க் என்ற வார்த்தையின் அர்த்தம்:
🔻 ஷிர்க் என்பது அரபு மொழி ரீதியான அர்த்தம்➖ இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் சமமாக்குவது.
🔻 இஸ்லாமிய பயன்பாட்டில்➖அல்லாஹ்வின் தனித்தன்மைகளில் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றொன்றை ஆக்குவது.
🎯 அல்லாஹ்வுக்கு ஒப்பாக எதுவும் இல்லை என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
🌷 فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ مِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا يَذْرَؤُكُمْ فِيْهِ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
🌷 (அவனே) வானங்களையும், பூமியையும் புதிதாகப் படைத்தவன், உங்களுக்காக உங்களிலிருந்தே ஜோடி(களான மனைவி)களையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் அவன் ஆக்கி அதைக்கொண்டு (இன உற்பத்திகளை இவ்வாறே பெருக்கி) உங்களை அவன் அதில் பரவச் செய்கிறான், அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
📗 (அல்குர்ஆன் : 42:11)
🌷 اَللّٰهُ الصَّمَدُ
🌷 அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).
📗 (அல்குர்ஆன் : 112:2)
🌷 لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
🌷 அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.
📗 (அல்குர்ஆன் : 112:3)
🌷 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
🌷மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
📗 (அல்குர்ஆன் : 112:4)
📌 அல்லாஹ் தனித்தவன், தனிதன்மை உடையவன்.
📌 அல்லாஹ்வுக்கு இணையாக எந்த ஒரு மனிதரையும் ஆக்க முடியாது.
📌 அவர் அந்தஸ்து, குலம், கவுரவத்தில் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு இணையாக முடியாது.
📌 அல்லாஹ்வின் ஆற்றல், வல்லமை, செயல்கள் அனைத்தும் தனித்தன்மையான தாகும்.
📌 அதில் அவனுக்கு இணையாக யாரையும் எதையும் ஆக்க முடியாது.
📍 அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவது மூன்றுவகை:
🔷 தவ்ஹீதுர் ருபூபியா ➖ அல்லாஹ்வின் செயல்களில் ஒருமைபடுத்துவது,
🔷 தவ்ஹீதுல் உளூஹியா ➖ நம் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைபடுத்துவது,
🔷 தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் ➖ அல்லாஹ்வின் பண்புகளில் அவனை ஒருமைப் படுத்துவது.
🔶 ஷிர்கும் மூன்று வகைகள் உண்டு.
🔶 தவ்ஹீதுர் ருபூபியாவில் ஏற்படும் ஷிர்க் ➖ அல்லாஹ்வின் செயல்களில் படைத்தல், காத்தல், ரிஸ்க் அளித்தல், நிர்வகித்தல் போன்ற செயல்களில் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கு பங்கு கொடுப்பது, நம்புவது.
🔸உதாரணமாக ரிஸ்க் அளிப்பவன் அல்லாஹ் ➖ மரணித்து கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர் ரிஸ்க் அளிப்பார், பரக்கத் அளிப்பார்கள் என்று நம்புவது.
🔸 இது அல்லாஹ்வின் செயல்களில் அல்லாஹ் அல்லாத ஒருவரை அவனுக்கு இணையாக ஆக்குவது.
🔶 தவ்ஹீதுல் உளூஹியாவில் ஏற்படும் ஷிர்க் ➖ அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய துஆ, குர்பான், நேர்ச்சை, தவக்குல், நேசம், பயம், ஆதரவு வைத்தல் போன்ற வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு செய்வது.
🔸 இது அல்லாஹ் அல்லாத ஒருவரை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவது.
🌹 வணக்க வழிபாடுகளின் அடிப்படைகள்:
🌹அல்லாஹ்வின் மீது முஹம்மத் நேசம் இருக்க வேண்டும்,
🌹அல்லாஹ்விற்கு நாம் அஞ்ச வேண்டும்,
🌹அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்க வேண்டும்,
🌹அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்க வேண்டும்,
🌹அல்லாஹ்விடம் மட்டும் நாம் துஆ செய்ய வேண்டும்.
🌹அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வேண்டும்.
🌹அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டவேண்டும்.
🔸இதில் ஏற்படக்கூடிய ஷிர்க்:
🔸அல்லாஹ் அல்லாத ஒன்றை, அல்லாஹ்வை நேசிப்பது போன்று நேசிப்பது.
🔸அல்லாஹ்வை எவ்வாறு அஞ்ச வேண்டுமோ அதைப்போல் மற்றவரை அஞ்சுவது.
🔸அல்லாஹ்விடம் நாம் கேட்கக்கூடிய துஆக்களை மற்றவர்களிடம் கேட்பது. அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை வைப்பது.
🔸இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஆகவும் இருக்கலாம் அல்லது மரணித்தவர்களுக்கு ஆகவும் இருக்கலாம் இரண்டுமே என்ற அடிப்படையில் வருகிறது.
🔶 தவ்ஹீதுல் அஸ்மா வஸ் ஸிஃபாத்தில் ஏற்படும் ஷிர்க் ➖அல்லாஹ்வின் பண்புகளை அவன் அல்லாத மற்ற ஒருவருக்கு கொடுப்பது.
🔸 உதாரணமாக அல்லாஹ் குணமளிப்பவன். அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய இந்த நம்பிக்கையை அல்லாஹ் அல்லாத மற்ற ஒருவருக்கு கொடுப்பது. அவரால் குணம் கிடைக்கும் என்று நம்புவது.
🔸குழந்தை பாக்கியம் தரக்கூடியது அல்லாஹ் மட்டும்தான், அதில் இணைவைப்பது, உதாரணமாக கப்ரில் அடக்கப்பட்ட ஒருவரின் இதில் குழந்தைக்காக துஆ செய்வது.
🎙 பாகம்➖ 24B ⏰ 12:42
❌ பெரிய ஷிர்க்கும் அதன் வெளிபாடுகளும். ❌
🔻ஷிர்க் இரண்டு வகையாகும்.
1⃣ பெரிய ஷிர்க்,
2⃣ சிறிய ஷிர்க்
💢 அதில் மிக மோசமானது பெரிய ஷிர்க்
கேள்வி: பெரிய ஷிர்க் என்றால் என்ன?❓
🔻 துஆ கேட்டல், பலியிடுதல் போன்ற எவ்விதமான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.
🔻 லா இலாஹ இல்லல்லாஹ் ➖ வணக்கத்திற்கு தகுதியான உண்மையான இறைவன் அல்லாஹை தவிர யாரும் இல்லை.
🔻 இந்த கலிமாவை மனதார நாம் சொல்லிவிட்டு, நம்முடைய அந்த வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு எவ்வாறு நம்மால் செய்ய முடிகிறது.
🔷 லா இலாஹ இல்லல்லாஹ் நம்மை சுவர்க்கத்தில் சேர்க்க கூடியதாக இருக்கிறது.
🔷 அந்த வார்த்தையில் உண்மையாளராக நாம் இருந்தால் மட்டுமே நமக்கு அது பயனளிக்கும்.
🔶 உதாரணமாக அவ்ளியாக்களிடம் துஆ செய்வது, அவர்களுக்காக பலி கொடுப்பது.
🔴 இது அல்லாஹ்வுக்கு இணையாக வேறு ஒருவரை ஆக்குவது.
🔴 இந்த செயல்கள் நம்மை சுவர்க்கத்தை விட்டு தடுத்து நிரந்தரமாக நரகத்தில் சேர்க்கும்.
🤲 அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
🔶 நீங்கள் பிரார்த்தித்து அழைக்க கூடியவைகள் எந்த ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகள், அவ்வாறு அழைப்பது மிகப்பெரிய அநியாயம் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌷 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ
🌷 இன்னும், அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம், அவ்வாறு செய்வீராயின், நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக ) நீர் ஆகிவிடுவீர்.
📗 (அல்குர்ஆன் : 10:106)
🔶 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்;
“பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (மூன்று முறை) கேட்டுவிட்டு, ‘அல்லாஹ்க்கு இணைவைப்பது, பெற்றாருக்கு கீழ்படியாமை, பொய் சாட்சியம் சொல்வது’ என்று கூறினார்கள்.
📌 (பெற்றோருக்கு கீழ்படிதல் என்பதில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து எந்த படைப்புக்கும் கீழ்படிவது என்பது கிடையாது)
❌ பெரும்பாவங்களில் மிகப் பெரிய பெரும்பாவம் ஷிர்க்➖ அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
🎤 பாகம் ➖24 C ⏰ 6:55
❓கேள்வி: அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவம் என்ன?
❌ பதில்: பெரிய ஷிர்க் செய்வது தான் அல்லாஹ் விடம் மிகப்பெரிய பாவமாகும்.
🌷 وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ
🌷 மேலும், லுக்மான் தன் மைந்தனுக்குஅவர் அவருக்கு உபதேசம் செய்தவராக என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை_(நபியே! நீர் நினைவு கூர்வீராக!)
📗 (அல்குர்ஆன் : 31:13)
🌷 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அறிவித்தார்; இறைத்தூதர் ﷺ அவர்களிடம் ‘நான் அல்லாஹ்விடம் விட மிகப்பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்; ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணை வைப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள்.
📗 (புகாரி, முஸ்லிம்)
‘الظلم’ ➖ ளுல்ம்
என்றால் அநியாயம் என்று அர்த்தம்.
🔶 இந்த வார்த்தையின் விளக்கம் ‘ஒரு பொருளை அதற்கு தகுதி இல்லாத இடத்தில் வைப்பது’
❌ அல்லாஹ்வின் தன்மைகளை, அவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை, அவனுக்கு இருப்பதாக நம்ப வேண்டிய விஷயங்களை,➖ அவனுடன் எந்தவகையிலும் இணையாக முடியாத அவனுடைய படைப்புகளுக்கு கொடுப்பது.
❌ அல்லாஹ்வின் தன்மைகளை, அவளுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, அவனிடம் நம்ப வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது மிகப்பெரிய அநியாயம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
❌ அல்லாஹ்வுடைய தன்மையை, அவனுடைய உயர்வை அவனுடைய கண்ணியத்தை, அவனுடைய மகத்துவத்தை நாம சாதாரண ஒரு மனிதராக வாழ்ந்து, மரணித்து, அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு இருக்கிறது என்று நம்பினால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.
❌ இப்படி செய்பவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்க மாட்டான்.
❌ சுவர்க்கத்தையும் வழங்க மாட்டான்.
🤲 நாம் அனைவரும் நம் அறியாமைக்கும், நம் தவறுகளுக்கும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்பை கேட்போம்.
🎯 இனி எந்த ஒரு காரியமாக இருந்தாலும் என்ற என் ரப்பிடம் மட்டுமே நான் கேட்பேன்.
🔹அவன் மீதே நான் நம்பிக்கை வைப்பேன்.
🔹அவனால் மட்டுமே எனக்கு தர முடியும்.
🔹அவனே எனக்கு பாதுகாப்பு அளிக்க கூடியவன்.
🔹அவனே என் நோய்களை நீக்கக் கூடியவன்.
🔹அவனே எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கக் கூடியவன்.
🔹என்னை மன்னித்து சுவர்க்கத்தில் சேர்க்க கூடியவன்.
🔹அல்லாஹ்வின் கருணையினால் மட்டுமே நாம் அனைவரும் சுவர்க்கத்தை அடைய முடியும்.
🤲 அல்லாஹ் நம் அனைவரையும் அவனுடைய கண்ணியத்திற்கு தக்கவாறு அவனை ஒருமைப்படுத்தியவர்களாக, சரியான முறையில் ஈமான் கொண்டவர்களாக வாழவைத்து, அந்த ஈமானோடு மவுத்தாக்கி, நம் அனைவரையும் ஜன்னதுல் பிர்தௌஸில் ஒன்று சேர்க்க துஆ செய்வோம். 🤲
🎀அகீதா🎀
💠பாகம் 25A ➖ 9:41
💢பெரிய ஷிர்க்கும் அதன் வெளிப்பாடுகளும்💢
📖பாடம்➖ 6 பக்கம்➖ 13
❓ கடந்த வகுப்பில் நாம் பெரிய ஷிர்க் என்றால் என்ன என்று பார்த்தோம்.
❌துஆ கேட்டல், பலியிடுதல் போன்ற எல்லாவிதமான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.
❌அது பெரும் பாவங்களில் மிகப் பெரிய பாவமாக இருக்கிறது.
❌அது ஒரு மிகப் பெரிய அநியாயமாக இருக்கிறது.
❌ஏனென்றால், நம்மை படைத்தவனான அல்லாஹ்வை விட்டுவிட்டு, அவன் படைத்த படைப்பினங்களிடம், மனிதர்களிடம், அல்லது இறந்து போன மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்து நமது தேவையை கேட்பது மிகப்பெரிய பாவமாகும் அநியாயமாகும்.
கேள்வி3⃣: இன்றைய முஸ்லிம்களுக்கிடையே ஷிர்க் இருக்கிறதா ❓❓❓
❌நிச்சயமாக இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் நாம் ஒரு தர்காவை பார்க்காமல் எந்த ஊரையும் கடந்து போக முடியாது.
❌இஸ்லாமியர்கள் வாழக்கூடிய இடமாக இருந்தாலும் சரி, அதில் ஒரு மஸ்ஜித் இருக்கும், மஸ்ஜிதை ஒட்டியோ அல்லது தாண்டியோ ஒரு தர்கா நிச்சயமாக இருக்கிறது.
🌺 அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ
மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
(அல்குர்ஆன் : 12:106)
🔳அல்லாஹ்தான் ரப்பு, அவன்தான் படைத்தான், நமக்கு ரிஸ்கை கொடுக்கிறான் என்று நம்புகிறோம்.
❌ஆனால், நமக்கு ஒரு கஷ்டம் வந்தால், உடனே ஒரு அவுளியாவுடைய கபுருக்கு சென்று விளக்கேற்றி, நேர்ச்சை செய்து அல்லது மற்ற பலவிதமான பாவமான காரியங்களை எல்லாம் செய்து நம் பிரச்சனைகளுக்கு அது தான் தீர்வு என்று எண்ணுகிறோம்.
🔳 நாம் எல்லோரும் முஸ்லிம்கள்தான் என்று கூறுகிறோம். அல்லாஹ்வுக்காக தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், எல்லாமே அல்லாஹ்வுக்காக செய்கிறோம்,
🎯ஆனால், அல்லாஹ்விடம் நேரடியாக நம் தேவையை கேட்க முடியாது என்று எண்ணி, துஆ மற்றும் மற்ற தேவைகளை மற்றவர்களிடம் கேட்டால் அல்லாஹ்விடம் நெருக்கமாகிவிடலாம் என்று எண்ணுகிறோம்.
🌷 அல்லாஹ்தான் ஷாஃபியாக இருக்கிறான்.
🔖நோயை தருவதும் அவனே, அதை சரி செய்வதும் அல்லாஹ்வே.
❌ஆனால், சில மக்கள் தர்காவில் மூன்று நாள் தங்கி இருந்தால் அவருடைய நோய் சரியாகிவிடும் என்று எண்ணுகிறார்கள்.
‼️ஷிர்க் என்பது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றது. அல்லாஹ்விற்கு இணையாக ஒருவரை எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று துஆ கேட்பது, அவரிடம் சென்று நேற்சைகளை நிறைவேற்றுவது, விழா எடுப்பது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இன்றும் கூட மஸ்ஜித் இல்லாத ஊர் கூட இருக்கின்றது. ஆனால், தர்கா இல்லாத ஊர் இல்லை. எல்லா ஊர்களிலும் தர்கா இருக்கின்றது.
🔳 அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியவன் என்று தக்பீர் கட்டி ஐந்து வேளை தொழுகிறோம், ஆனால் ஒரு பொருளாதார கஷ்டமோ, உடம்பில் நோயோ நமக்கு வந்தால், உடனே அவ்லியாக்களிடம் சென்று துஆ செய்து காணிக்கை கொடுக்கிறோம்.
☝இவை அனைத்தும் இன்றைய முஸ்லிம்களிடையே ஷிர்க் இருக்கின்றது என்று உறுதிப்படுத்துகிறது.
🔳அல்லாஹ் நம் அனைவரையும் இந்த விஷயங்களை விட்டு பாதுகாக்கனும் என்று துஆ செய்வோம்.
🌺 நபி (ﷺ) கூறினார்கள் :
“என்னுடைய சமுதாயத்தினரில் சிலர் பிரிவினர்கள் இணைவைப்போர் உடன் சேர்ந்து கொண்டு சிலைகளைக் கூட வழிபடுபவர்கள் ஆகும் வரை மறுமை ஏற்படாது” என்று கூறினார்கள். (திர்மிதி)
🔳நபி (ﷺ) எச்சரித்தார்கள், மக்கள் சிலையை வணங்காத வரை மறுமை நாள் வராது என்று.
💥சிலை என்பது கல்லால் செதுக்கி, கண்ணால் பார்த்து வணங்குவது.
💥கப்ர் என்பது அதில் அடக்கம் செய்த மனிதர் நமக்கு நம்முடைய தேவையை கொடுப்பார் என்று நினைத்து வணங்குவது.
🎯இவை இரண்டுமே இணைவைப்பாகும்.
🔳 அல்லாஹ் தான் நம் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.
❌நிச்சயமாக ஷிர்க் என்பது மிகப்பெரிய மோசமான அநியாயமாக இருக்கிறது.
❌இதை செய்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்றும், ஜன்னத்தை விட்டு தடுக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் செய்த அனைத்து அமல்களும் வீணாகி விடும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
💠பாகம் 25B ➖9:52📝⤵
💢பெரிய ஷிர்க்கும் அதன் வெளிப்பாடுகளும்💢
கேள்வி4⃣: மரணம் அடைந்தவர்கள் அல்லது நேரில் இல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வதன் சட்டம் என்ன ❓❓❓
❌அவர்களிடம் பிரார்த்தனை செய்வது பெரும்பாவமாகும்.
🌺 அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுவது போல :
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ
ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
(📕அல்குர்ஆன் : 26:213)
📌அல்லாஹ் இருக்கும் போது, மரணம் அடைந்தவர்களிடம் துஆ கேட்டு இணை வைப்பவர்களாக ஆகி விடாதீர்கள், அப்படியாயின், வேதனை செய்யப்படுகிற ஒருவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.
❌அல்லாஹ்வுடைய வேதனை எப்படிப்பட்டது ❓❓❓
💢 நரகத்தில் குறைந்த அளவு தண்டனை என்னவென்றால் ஒருவர் கரண்டைக்கால் வரை நெருப்பு இருக்கும், அந்த நெருப்பின் வெப்பத்தால் அவரது மூளை உருகி ஊத்தும்.
💢 நரகத்தின் நெருப்பு உலக நெருப்பை விட 70 மடங்கு அதிகமானது. உலக நெருப்பையே நம்மால் தாங்க முடியவில்லை. குறைந்தபட்ச வேதனையில் நம்முடைய மூளை உருகி ஊற்றுகிறது என்றால், அப்பொழுது அல்லாஹ் நம்மை அதிகபட்ச வேதனை செய்துவிட்டால் நம்மால் தாங்க முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
💢 அப்படிப்பட்ட செயல்கள் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அல்லாஹ்விடம் தவ்பா செய்துவிட வேண்டும்.
💢அல்லாஹ்வுடைய வேதனையை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
(📕அல்குர்ஆன் : 89:25)
☝அல்லாஹ்வுடன் வேறு ஒருத்தர் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுக்கு மற்றவைகளை இணையாக்கி, ஷிர்க்கான காரியங்கள் செய்து, இப்படிப்பட்ட வேதனைக்கு உள்ளாக்கி விடாதீர்கள் என்று மனிதர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
❌அல்லாஹ்வையும் வணங்கி கொண்டு அவனுக்கு இணையாக தர்கவிற்கு சென்று அவ்லியாக்களையும் அவர்களுக்கு விளக்கேற்றுவது, அவர்களிடம் சென்று துஆ கேட்பது, அங்கு சென்று சீர்ணி வாங்கி சாப்பிடுவது.
🎯அல்லாஹ்தான் அனைத்தையும் தருகிறான் என்று தெரிந்தும் , உணர்வில்லாமல் இந்த மாதிரி ஷிர்க்கான காரியங்களை செய்வதற்கு நம்முடைய மனதுக்கு உருத்த வேண்டாமா⁉⁉
🎯உணர்ந்து கொண்டால், உடனே அல்லாஹ்விடம் தவ்பா செய்தவர்களாக இருக்க வேண்டும்.
🌺 நபி (ﷺ) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வுக்கு இணையாக பிறரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்” 📕புகாரி
📍நாம் மறுமை சொர்க்கம் நரகம் ஆகியவற்றை உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆதலால், அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு அவனுக்கு இணையாக ஒன்றையும் வணங்கிக் கொண்டு மரணிதவர் நரகம் செல்வார்.
☝ நபி (ﷺ) அவர்கள் கூறும் இந்த வாக்கு முற்றிலும் உண்மை. அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு தேடி , அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக திரும்பக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
💖அல்லாஹ் நம்மை மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான்.
கேள்வி5⃣: பிரார்த்தனை (துஆ) ஒரு வகையான வணக்கமா❓❓❓
📍பெரும்பான்மையான ஷிர்க் துஆ கேட்பதில் தான் நடக்கின்றது. மக்கள் அதிகம் இதில் தன் தவறு செய்கின்றார்கள்.
🎗ஆம், பிரார்த்தனை (துஆ) ஒரு வணக்கம் தான்.
📍நம்மில் சிலர் துஆ என்பது ஒரு வணக்கம் இல்லை என்று நினைத்து, கப்ருகளுக்கும் தர்காக்களுக்கும் சென்று இறந்தவர்களிடம் துஆ கேட்டால், இறந்தவர்கள் அல்லாஹ்விடம் இவர்களுக்காக எடுத்துச் சொல்வார்கள் என்று எண்ணுகிறார்கள்.
📍இறந்தவர்களால் நம்மை பார்க்க முடியுமா❓❓நம்முடைய துஆவை கேட்க முடியுமா ❓❓ நம்முடைய துஆவை அல்லாஹ்விடம் கொண்டு செல்ல முடியுமா❓❓
🎯இதையெல்லாம் இறந்தவர்களால் செய்ய முடியும் என்று அல்லாஹ் எங்கேயாவது கூறியிருக்கிறானா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
🌺 அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
(📕அல்குர்ஆன் : 40:60)
☝ பிரார்த்தனை (துஆ) என்பது நிச்சயமாக ஒரு வணக்கமாக (இபாதத்) இருக்கிறது.
🌸அல்லாஹ் யார் என்னிடம் துஆ கேட்கிறார்களோ அவர்களுக்கு நான் பதில் அளிக்கிறேன் என்று கூறுகிறான்,.
🎯ஆதலால், துஆ என்ற வணக்கத்தை நாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செலுத்த வேண்டும்.
📌யவரெல்லாம் அல்லாஹ்விடம் துஆ கேட்காமல் பெருமை அடித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் கேவலம் அடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.
🌺 நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்; ” துஆ வணக்கம் ஆகும்”
🔅 நமக்கு ஒரு கஷ்டம் நேர்ந்தால் உடனே அவ்லியாக்களிடம் அல்லது மற்றவர்களிடம் செல்லாமல் அல்லாஹ்விடம் மட்டுமே நம்பிக்கை வைத்து நமது துஆவை அவனிடம் கேட்க வேண்டும்.
🎯அல்லாஹ்வின் மீது வைக்க கூடிய நம்பிக்கையை வேறு யார் மீதும் வைக்க கூடாது. யாரிடமும் கேட்கவும் கூடாது.
🎯துஆ என்பது ஒரு வணக்கம் அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
பாகம் 25C➖12 : 20📝⤵
💢பெரிய ஷிர்க்கும் அதன் வெளிப்பாடுகளும்.💢
⁉கேள்வி6⃣: இறந்தவர்கள் நம்முடைய பிரார்த்தனைகளை செவியேற்கிறார்களா ❓❓❓
💥இல்லை, அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
💥 இந்த ஒரு விஷயம் நமக்கு புரிந்தாலே, இறந்தவர்களிடம் கேட்பது எவ்வளவு பெரிய மடத்தனமான விஷயம் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
🎯 நாம் அவர்களிடம் மௌனமாக மனதில் துஆ கேட்டாலும் சரி, அல்லது சத்தமாக கத்தி துஆ கேட்டாலும் சரி, இறந்தவர்களுக்கு அது காதில் விழுமா❓❓
💥 இருந்த இடத்திலிருந்தே அஜ்மீரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம், நமது தேவைக்கோ அல்லது கஷ்டத்துக்கோ துஆ கேட்டால், அவரால் செவியேற்க முடியுமா❓❓
💢 நிச்சயமாக அவர்களுக்கு கேட்கவே கேட்காது 💢
🔲இதைப்போல், வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வெவ்வேறு தர்காக்களில் அடக்கம் செய்தவர்களிடம் துஆ செய்கின்ற மக்கள் அனைவரும், இந்த ஒரு விஷயத்தை மட்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் 👇
💢 நாம் கேட்கக்கூடிய இந்த துஆ அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் காதில் விழுகிறதா❓❓💢
🔲இந்த ஒரு விஷயத்தை நாம் உணர்ந்து புரிந்து கொண்டாலே, கபுருகளுக்கோ, தர்காக்களுக்கோ சென்று நம் தேவைகளை வேண்டி அவர்களிடம் துஆ செய்ய மாட்டோம்.
💖 அல்லாஹ் அனைத்தையும் செவியேற்கிறான் , பார்க்கிறான் ஒவ்வொரு நிமிடமும் நம் உள்ளத்தை அரியக் கூடியவனாக இருக்கிறான்.
⁉️அப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தன்மைகளை நாம் ஒரு மனிதனுக்கு கொடுக்கலாமா❓❓
🌺 அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ
…. மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
(அல்குர்ஆன் : 35:22)
💢 ஒருவர் இறந்து , கபுரில் அடக்கம் செய்த பிறகு , உங்களால் யாரையும் செவியேற்க வைக்க முடியாது, என்று அல்லாஹ் கூறுகிறான் ☝
🌺 இப்னு உமர் (ரலி)அறிவித்தார்: பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து நபி (ﷺ) அவர்கள்,
فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا
உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா ??? என்ற வசனத்தை ஓதினார்கள்.
(அல்குர்ஆன் : 7:44)
⚜ அநியாயக்காரர்கள்களாக வாழ்ந்து இறந்து போனால் பெரிய தண்டனை இருக்கிறது என்று அல்லாஹ் வாக்கு கொடுத்திருக்கிறான்.
▫️ பத்ரு போரில் இறந்தவர்களை நோக்கி நபி (ﷺ) கேட்கிறார்கள் ,
📌 அல்லாஹ்வுடைய வேதனை உங்களுக்கு கிடைத்து விட்டதா❓❓
📌 அந்த வேதனையை அறிந்து கொண்டீர்களா ❓❓
📌 அல்லாஹ்வுடைய வார்த்தை , அவனுடைய வாக்கு உண்மையன நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா ❓❓
📍அதன் பிறகு நபி (ﷺ) கூறினார்கள் ,
” இப்போது அவர்கள் நான் சொல்வதைக் கேட்கிறார்கள்” .
இச்சம்பவத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்ட போது அவர்கள் கூறினார்கள் : நபி (ﷺ)..’ இப்போது அவர்கள் நான் அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தது உண்மை என்பதை அறிவார்கள் ‘ என்றுதான் கூறினார்கள், என்று சொல்லி விட்டு,
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى
” நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது…. ” என்ற குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
(அல்குர்ஆன் : 27:80)
🌺 இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் கதாதா , “நபி (ﷺ) அவர்களின் சொற்களை கண்டிப்பாகவும் , அவமானமாகவும் , கைசேதமாகும் அவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்” என்று கூறினார்கள். ( புஹாரி )
🔳அவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். அதே சமயம், நபி (ﷺ) சொன்ன இந்த விஷயத்தை அவர்கள் கேட்பதற்காக, கேட்கக்கூடிய தன்மையை அல்லாஹ் அவர்களுக்கு அப்பொழுது கொடுத்தான். எனவே நபி (ﷺ) அவர்களின் வார்த்தைகளை அவர்கள் கேட்டார்கள்.
🏵 “நிச்சயமாக நீர் மரித்தோரை கேட்கும்படி செய்ய முடியாது” என்று அல்லாஹ் குர்ஆனில் கூறிய வசனத்தையும் நபி (ﷺ) ஓதினார்கள்.
🏵யாருக்கும் அந்த ஆற்றல் கிடையாது , யாராலும் இறந்தவர்களை கேட்க வைக்கவும் முடியாது. அல்லாஹ் நாடியதால்தான் அந்த காஃபிர்களுக்கு , நபி (ﷺ) அவர்களின் வார்த்தையை மட்டும் கேட்கும்படி ஆக்கினான்.
💢 இந்த ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகள் 💢
📌 பத்ரு போரில் கொல்லப்பட்ட இந்த இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளையால் தற்காலிகமாக செவியேர்க்கும் சக்தி பெற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
🏵”இப்போது அவர்கள் நான் அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தது உண்மை என்பதை அறிவார்கள்” என்ற நபிமொழி
🏵 இப்போது அவர்களால் கேட்க முடியும், பிறகு அவர்களால் கேட்க முடியாது, என்பதையே இந்த ஹதீஸ் குறிக்கிறது. ☝
🏵கதாதா அவர்கள் கூறியது போல, ” அல்லாஹ்வின் சொற்களை ஒரு கண்டிப்பாகவும் , அவமானமாகவும் அவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்.
🔅 நபியுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அவர்களுக்கு அவர்கள் செய்த காரியத்தின் முடிவை நினைத்து அவமானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
🔅 அல்லாஹ் மற்றும் நபி (ﷺ) அவர்களின் எச்சரிக்கையை கேட்டும், பின்பற்ற வில்லையே, அதன்படி நடக்கவில்லையே என்பதை அவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவும், அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்.
📌 இப்னு உமர் ரலி அவர்களுடைய அறிவிப்பை மறுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய வாதம், நபி (ﷺ) அவர்கள் கேட்க முடியும் என்று கூறவில்லை,
‘இப்போது அவர்கள் அறிவார்கள்’. என்றுதான் கூறினார்கள். இந்த வாதம்,
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى
” நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது….” (அல்குர்ஆன் : 27:80) என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டது.
☝மேலே கூறப்பட்ட இரண்டு ஹதீசுகளும் பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்படுகிறதுபோல் நமக்கு தெரிந்தாலும் ,
🏵மார்க்கத்தை நன்கு கற்று அறிந்த உலமாக்கள் , இரண்டு ஹதீஸ்களும் இணைத்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
🏵குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் போல்; ” இறந்தவர்கள் கேட்க முடியாது என்பது உண்மை” ,
🔅ஆனால்,கதாதா (ரலி) கூறுவது போல , ‘பத்ருப்போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களை அல்லாஹ் ஒரு அற்புதமாக நபி (ﷺ) அவர்களுக்காக, அவர்கள் அவருடைய சொற்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் அந்த நேரத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்.
🏵இந்த விஷயத்தில் அல்லாஹ்வே நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.
🔅கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் தேவையை கேட்டாலோ, அல்லது அவர்களை ஒரு கஷ்டமான நேரத்தில் அழைத்தாலோ அவர்களால் செவியேற்க முடியுமா ❓❓❓
❌சிலர் பிரசவத்தின் போது யா அல்லாஹ் என்று சொல்லாமல் யா முகையதீன் என்று கூறும்படி சொல்வார்கள். அவ்வாறு சொல்வது கூடாது அல்லாஹ் அவர்களை மன்னிக்கட்டும்.
❌ நிச்சயமாக உலகத்தை விட்டு பிரிந்து விட்டால் யாராலும் செவியேற்க முடியாது.
🔅இந்த உலகில் இருக்கும் போதே நமது செவியேற்க்கும் திறன் ஒரு அளவுக்கு தான் இருக்கிறது.
🔅 நம் அருகில் யாரும் பேசினால் மட்டுமே நம்மால் கேட்க முடியும்.
பக்கத்து வீட்டில், அல்லது அடுத்த தெருவில் யாரும் பேசினால் நம்மால் கேட்க முடியுமா ❓❓ நிச்சயமாக நம்மால் கேட்க முடியாது.
⁉ நாம் இருக்கும் போதே இந்த நிலைமை என்றால், இறந்த பிறகு எப்படி நம்மால் செவியேற்க முடியும் ⁉⁉⁉
🔅கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர் ஒரு சாலிஹான நல்லடியாராக வாழ்ந்திருந்தால் கூட , அவருடைய கேட்கும் திறன் மற்ற மனிதர்களைப் போலத்தான் இருந்திருக்கும்.
🔅உயிருடன் இருக்கும் பொழுதே அவர்களுக்கு எந்த சக்தியும் இருந்திருக்காது , அப்போது அவர் இறந்து அடக்கம் செய்த பிறகு அவர்களுக்கு , நம் பிரச்சனைகளை கேட்டு சரி செய்யக்கூடிய சக்தி வந்துவிட்டதா ❓❓ என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
🤲🏼 இந்த ஷிர்க்கை விட்டு நம் அனைவரையும், நம் சகோதர சகோதரிகள், மற்றும் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.🤲🏼
🤲🏼அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை கொடுக்கவேண்டும் என்று துஆ கேட்க வேண்டும்.
🤲🏼ஒரு துளி அளவு கூட ஷிர்க்கு இல்லாதவர்களாக , அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் நினைக்காதவர்களாக, எதையும் நம்பாதவர்களாக, யாரிடமும் கேட்காதவர்களாக, அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து இருப்பவர்களாக, அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பவர்களாக, அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பான் என்று அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்தவர்களாக இருக்க வேண்டும்.
🎀 அகீதா 🎀
🎙 பாகம்➖ 26A ⏰ 13:26
📕பாடம்➖ 7 பக்கம்➖ 16
📜 பெரிய ஷிர்கின் வகைகள்:
☘ அல்லாஹு தஆலா நம்மீது அன்புடையவனாக இருக்கிறான். அவனது ரஹ்ம் என்ற பண்பை உடையவனாக இருக்கிறான். அவன் ரஹ்மானாக, ரஹீமாக இருக்கிறான்.
☘ அல்லாஹ்வின் உதவியால் நாம் அகீதாவை பற்றி படித்து வருகிறோம். அல்லாஹ்வை கண்ணியப்படுத்துதல், அவனின் தனித்துவம், அவனை ஒருமைப்படுத்துதல், அவனை வணங்குவது ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
☘ அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற “லா இலாஹ இல்லல்லாஹ்” கலிமாவிற்கு எதிராக ஏற்படக்கூடிய பெரிய ஷிர்க்கைப் பற்றி பார்ப்போம்.
🚫பெரிய ஷிர்க் நம்முடைய ஈமானை உடைத்தெறிந்து விடும்.
⚠️வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்ற கலிமாவை உடைத்தவர்களாக, இஸ்லாத்தை உடைத்தவர்களாக நம்மை பெரும்பாவங்களில் பெரிய பாவத்தில் சேர்த்து விடும்.
⚠️அதன் விளைவு அல்லாஹ்வின் பாதையை விட்டும், அவனின் கருணையை விட்டும், அவனின் மன்னிப்பை விட்டும், ஜன்னத்தை நாம் அடைவதிலிருந்தும் தூரமாக்கிவிடும்.
⚠️நாம் செய்யும் நன்மைகள் அனைத்தையும் அழித்துவிடும்.
⚠️அல்லாஹ் கூறியவாறு அவனுடைய ஒருமைப்படுத்தாமல், அல்லாஹ் அல்லாதவைகளிடம் துஆ கேட்பது, பலியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விற்கு இணைவைப்பது பெரிய ஷிர்க் ஆகும், நம்மை நரகின் பக்கம் சேர்ந்துவிடும்.
🌻 கேள்வி 7
☘ இறந்தவர்கள் மற்றும் நம்மோடு இல்லாதவர்களிடம் உதவி கேட்கலாமா❓
🌼 பதில்: கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும். இறந்தவர்களை செவியேற்க வைக்க முடியாது.
📖 அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
🌺 وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ
🌺 மேலும், அல்லாஹ்வையன்றி, அவர்கள் அழைக்கிறார்களே அத்தகையோர்-அவர்கள் எந்தப்பொருளையும் படைக்க மாட்டார்கள், அவர்களோ (அவனால்) படைக்கப்படுபவர்களாவர்.
📗(அல்குர்ஆன் : 16:20)
🌺 اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ
🌺 (அன்றி அவர்கள்) இறந்தவர்களே – உயிருள்ளவர்களல்லர், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டர்கள்.
📗(அல்குர்ஆன் : 16:21)
💥 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழுகையிலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதவில்லை என்றால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. இது நிபந்தனைகளில் ( ருகுன்) ஒன்றாகும். நாம் தொழக்கூடிய ஃபர்ளு, சுன்னத், நஃபில் ஆகியவற்றில் ,” உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம்” என்று சொல்கிறோம்.
📌 இறந்தவர்களிடம் இருந்து எந்த உதவியும் பெற முடியாது.
📌 இதுவரை தெரியாமல் செய்தவர்களுக்கு விளக்கம் அளித்து, தவ்பா செய்யக்கூடியர்களாக அவர்களை, இந்த அபாயகரமான அறியாமையிலிருந்து காப்போம்.
📖 அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
🌺 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ
🌺 நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடியபோது “(அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
📗 (அல்குர்ஆன் : 8:9)
📌 பத்ர் யுத்தத்தைத் பற்றி அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான். அல்லாஹ்விடம் உதவி கேட்டீர்களா, அவன் அணிஅணியாக ஓராயிரம் மலக்குகளை கொண்டு உதவி புரிந்தான். சஹாபாக்கள் மிக சொற்பமாக இருந்தார்கள். அவர்களின் துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளித்துவிட்டான்.
🎯 நம்மை கஷ்டங்களினாலும், நெருக்கடிகளாலும் சோதிக்கும் போது அல்லாஹ்வின் நம்பிக்கையில் உறுதியாக பொறுமையாக அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடினால் அல்லாஹ் நம்மை பாதுகாத்து மறுமையில் நமக்கு ஜன்னத்தையும் தருவான். இன் ஷா அல்லாஹ்.
🎙 பாகம் ➖26B ⏰ 11:48
🌻 கேள்வி 8:
☘ அல்லாஹ்வை தவிர மற்றவர்களிடம் உதவி கேட்கலாமா❓
🌼 பதில்: உதவி கேட்கக்கூடாது.
📖 அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
🌺 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
🌺 (எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
📗 (அல்குர்ஆன் : 1:5)
🌷 நபி ﷺ கூறினார்கள்:
_’நீங்கள் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள், நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுங்கள்.’
🎯 எனவே நமக்கு என்ன தேவை ஏற்ப்பட்டாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும், அதை நாம் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.
🌻 கேள்வி 9
☘ உயிருடன் இருப்பவர்களிடம் உதவி கேட்கலாமா❓
🌼 பதில்: ஆம், கேட்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த சக்தியைக்கு கொண்டு மனிதர்களால் முடிந்த காரியங்களில் உதவித் தேடலாம்.
📖 அல்லாஹ் கூறுகிறான்:
🌺 وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى
🌺 இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்,
📗 (அல்குர்ஆன் : 5:2)
🗝 மனிதர்கள் செய்யக்கூடிய நன்மையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்.
🗝 உதாரணமாக: அல்லாஹ்வை வணங்குவதற்கு, சரியான நேரத்தில் தொழுவதற்கு, தக்வாவுடன் வாழ்வதற்கு, அல்லாஹ்வை அஞ்சக்கூடிய விஷயங்களில் அஞ்சுவதற்கு , பாவங்கள் செய்யாமல் இருப்பதற்கு, பாவங்கள் செய்தால் அதிலிருந்து மீள்வதற்கு முதலிய மார்க்கத்துக்குட்பட்ட அனைத்து விஷயங்களிலும் உதவி புரியலாம்.
🗝 நம் அண்டை வீட்டாருக்கும், சொந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மார்க்கம் அனுமதித்த முறையில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
🌷 நபி ﷺ ‘ஓர் அடியான் நன்மையான காரியங்களில் தம் சகோதருக்கு உதவும் வரை,அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்’ என்று கூறினார்கள்.
📕(முஸ்லிம்) .
🌻 கேள்வி 10
☘ அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா❓
🌼 பதில்: நிச்சயமாக கூடாது.
📖 அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
🌺 اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
🌺 இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண்குழந்தை பெற விரும்பி இரட்சகனிடம்,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால் (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (பிரார்த்தனைகளைச்) செவியுறுகிறவன், (மனத்திலுள்ளவற்றை) நன்கறிகிறவன்” என்று) பிரார்த்தித்துக் கூறியதை (நினைவு கூர்வீராக!)
📕 (அல்குர்ஆன் : 3:35)
🔖 நேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அது அல்லாஹ்விற்காக மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில் நம் காரியங்களை நிறைவேற்றி தருபவன் அல்லாஹ் மட்டுமே.
🔖 எனினும் நேர்ச்சை இஸ்லாத்தில் ஆர்வமூட்டப்படவில்லை. நேர்ச்சை எதையும் மாற்றாது.
🔖 கஞ்சனிடம் உள்ள பொருளை வெளியே கொண்டு வருவதை தவிர.
🌷 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
📗 (ஸஹீஹ் முஸ்லிம் : 3373)
🌻 நேர்ச்சைக்கு பதில் நல்அமல்கள் செய்து துஆ கேட்பது, தொழுது, நோன்பு வைத்து, சதகா செய்து துஆ கேட்பது போன்ற காரியங்கள் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடலாம்.
💥 ஆனால் ஒருவர் அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். சதகா செய்வதை கொண்டும், நோன்பைக் கொண்டும் நேர்ச்சை செய்தால், அதை நிறைவேற்றி ஆக வேண்டும்.
🚫❌ இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களுக்கு நேர்ச்சை செய்வது கூடாது. ஏதேனும் தர்காகளுக்கோ அல்லது யாரேனும் அவுலியாக்களுக்கோ நேர்ச்சை செய்வது கூடாது. அவ்வாறு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்ற கூடாது.
🎙 பாகம் ➖26C ⏰ 16:36
🌻 கேள்வி 11
☘ அல்லாஹ்வை தவிர பிறருடைய பெயரில் குர்பானி கொடுக்கலாமா❓
🌼 பதில்: நிச்சயமாக கூடாது.
அல்லாஹு தஆலாவிற்கு மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும்.
📌 உணவுக்காக நாம் அறுக்கும் பிராணிகளில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதது நமக்கு ஹராம் ஆகும்.
📌 பிஸ்மில்லாஹ், அல்லாஹ் அக்பர் என்று கூறி அறுக்கப்பட்டதை மட்டுமே நாம் உண்ண வேண்டும்.
📌 குர்பானி அறுத்து பலியிடுதல் என்ற இந்த இபாதத் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
📖 அல்லாஹ் கூறுகிறான்:
🌺 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
🌺 ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
📗 (அல்குர்ஆன் : 108:2)
🌷 நபி ﷺ “யார் அல்லாஹ்வை தவிர பிறருக்கு குர்பானி கொடுக்கிறாரோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்.” என்று கூறினார்கள்.
📕 (முஸ்லிம்)
💥 இந்த செயல் பெரும்பாவங்களில் பெரும் பாவமான ஷிர்க் ஆகும்.
🚫❌ சிலர் புதியதாக வீடு கட்டி குடிபுகும்போது இரத்தப்பலி கொடுப்பது போன்ற மாற்று மதகலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். தீய விஷயத்தில் இருந்தும், காத்து கருப்பு போன்றவற்றிருந்து பாதுகாப்பு பெறுவோம் என்று கூறுகிறார்கள். இது நாம் ஜின்களுக்கு பலியிடுதல் போன்றும், ஜின்களை வணங்குவது போன்றும் ஆகிவிடும்.
❌🚫 அல்லாஹ்விடம் கேட்காமல், அல்லாஹ் அல்லாதவைகளிடம் துஆ கேட்பது, பலியிடுவது, உதவி கேட்பது, நேர்ச்சை செய்வது போன்றவை பெரும் பாவமான ஷிர்க் ஆகும். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக.
🌻 கேள்வி 12
☘ கஃபா அல்லாத மற்ற இடங்களை சுற்றி வரலாமா❓
🌼 பதில்: கூடாது. தவாஃப் செய்வது கஃபாவிற்கு மட்டும் உள்ள சிறப்பம்சமாகும்.
📖 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌺 وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ
🌺 பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் தவாஃப் செய்யவும்.
📗 (அல்குர்ஆன் : 22:29)
🌷 நபி ﷺ “யார் கஃபாவை 7முறை தவாப் செய்து, 2 ரகஅத் தொழுகிறாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்வது போலாகும்”.
📕 (இப்னஉமாஜா)
🚫❌ சிலர் இறந்தவர்களின் கப்ருகளையும், அவுலியாக்களின் கப்ருகளையும் சுற்றி வருவது, அவர்களிடம் துஆ செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலையை நாம் காண்கிறோம். இது பெரிய ஷிர்க் ஆகும். பெரும்பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும்.
🌻 கேள்வி 13
☘ சூனியத்தை பற்றி இஸ்லாமிய சட்டம் என்ன❓
🌼 பதில்:
📖 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌺 وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ
🌺 எனினும் ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சூனியத்தை மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார்கள்.
📗 (அல்குர்ஆன் : 2:102)
❌🚫 சூனியம் செய்வது, சூனியத்தை நீக்க சூனியம் பார்ப்பது குஃப்ர் ஆகும்.
🌷 நபி ﷺ கொடிய பாவங்களை தவிர்த்துவிடுங்கள். சூனியம், ஷிர்க் போன்றவை…
📕 (முஸ்லிம்)
💥 ஈமானுள்ள மக்கள் சூனியத்தை எப்போதும் செய்ய மாட்டார்கள்.
❌🚫 சூனியம் என்பது இல்லவே இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.அது தவறு.
💥 சூனியம் இருக்கிறது. நபி ﷺ அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களை சூனியத்தின் எல்லாவிதமான தீமைகளிருந்து பாதுகாத்தான்.
🎯 சூனியம் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.
🎯 மனிதர்களுக்கு நோய் நொடிகள் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவது போல், யாராவது சூனியம் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறே நாம் என்ன மருத்துவம் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே (ஷிஃபா) நோய் அகன்று நிவாரணமும் கிடைக்கும்.
💥 குஃப்ரை கொண்டு தான் சூனியம் செய்ய முடியும். அதனால் ஒரு முஃமின் சூனியம் செய்ய மாட்டார்
📌 சூனியம் நோய் நொடிகள் எல்லாவற்றிலும் இருந்து பாதுகாப்பு பெற நாம் தினமும் ஓத வேண்டிய சந்தர்ப்ப துஆக்களை ஓதி, குல் சூராக்கள், காலை மாலை ஓத வேண்டிய துஆக்களை ஓதி வந்தால் அவற்றின் தீங்கிலிருந்து அல்லாஹ்வின் உதவியை கொண்டு அவனுடைய பாதுகாப்பு கிடைக்கும்.
🌻 கேள்வி 14
☘ ஜோதிடம் மற்றும் குறி சொல்பவர்கள் பேச்சில் நாம் நம்பிக்கை கொள்ளலாமா❓
🌼 பதில்: நிச்சயமாக கூடாது.
📖 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌺 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ
🌺 அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைந்திருப்பவைகளை அறியமாட்டார்கள், மேலும், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் உணர மாட்டார்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக!
📗 (அல்குர்ஆன் : 27:65)
🌿நபி ﷺ “யாரேனும் ஜோதிடரிம் சென்று அவர் செல்வதை நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் முஹம்மது மீது அருளியுள்ளதை மறுத்து விட்டார்”.
📕 (அஹ்மத்)
🚫❌ நாம் ஜோதிடரிம் சென்று நமக்கு என்ன நடக்க உள்ளது என்பதை பற்றியும், நம்முடைய வாழ்க்கைப் பற்றியும், நம்முடைய குழந்தைகள் எதிர்காலம் பற்றியும் கேட்கக்கூடாது. இவைகள் அனைத்தும் அல்லாஹு தஆலாவிற்கு மட்டுமே உரிய ஞானம் ஆகும். இப்படி செய்பவர்களின் 40 நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ள படாது.
🌻 கேள்வி 15
☘ மறைவானவற்றை யாரேனும் அறிய முடியுமா❓
🌼 பதில்: முடியாது.
📖 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
🌺 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
🌺 இன்னும், அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன, அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார், மேலும், கரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான், அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை, பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும் பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
📗 (அல்குர்ஆன் : 6:59)
💥 அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் மறைவானவற்றின் ஞானம் இல்லை.
💥 ஒருவரின் பிறப்பு, இறப்பு, அவர் சம்பாதிப்பது, அவரது லாபம், நஷ்டம், மழை வருவது, நாளை என்ன நடக்கும், மழை பொழிவது போன்ற ஞானம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது.
🌷 நபி ﷺ அவர்கள் “அல்லாஹ்வை தவிர மறைவானவற்றின் அறிவு யாருக்கும் இல்லை.”
📕 (தப்ரானி)
📌அல்லாஹுதஆலாவிற்கு மட்டுமே நீரில் உள்ளது, நிலத்தில் உள்ளது, மரத்தின் இலை உதிர்வது , இருளில் மூழ்கிக் கிடக்கும் சிறிய பொருள் ஆகிய அனைத்து அறிவும் உள்ளது.
🚫 இதைப்பற்றி இல்மு இல்லாமல் மக்கள் ஹஜ்ரத்களிடமும், தன்னை மகான் என்று சொல்லி கொள்பவர்களிடமும் சென்று தம் வாழ்வாதாரத்தைப் பற்றியும் நடக்க போகுது நன்மை தீமைகள் பற்றியும் கேட்கிறார்கள்.
🤲🏼 இதிலிருந்து நம்மை காப்பாற்றி, இப்பாவத்திலிருந்து மீண்டு தவ்பா செய்யக்கூடியர்களாக ஆக அல்லாஹ் அருள் புரிவானாக.
📌 மறுமை உண்டு என்று நம்பி, நரகிலிருந்து நம்மை பாதுகாத்து, ஜன்னத்தை அடையக்கூடிய வழிகளை நாமும் பின்பற்றி நம்மால் முடிந்த வரை பிறருக்கு எடுத்து சொல்வோம்.
🎯 லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவர்களாக வாழ்ந்து, அதிலேயே உறுதி உள்ளவர்களாக நிலைப்பெற்று , அந்த நிலையில் மரணிக்கக்கூடியவர்களாக வல்லமை உள்ள அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்மை ஆக்குவானாக. 🤲🏼
☘ இறைவன் எவ்வித தேவையும் அற்றவன், நம்முடைய நெருக்கடியான நேரத்தில் நம் தேவைகளை இந்த துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என நபி ﷺ கூறுகிறார்கள்.
🌷 “يا حي يا قيوم برحمتك استغيث”
🌷 “உயிருள்ளவனே, நிலையானவனே உன்கருணையை கொண்டு உதவி தேடுகிறேன்” என்று துஆ செய்தால், அல்லாஹ் நம்முடைய துஆ வை கபூல் செய்வான்.
🎯 இது ஓர் இபாதத் ஆகும். இந்த துஆவில் வரும் ‘அஸ்தகீஸு’…..என்னும் வார்த்தை ஆபத்தான நிலையில் கேட்கப்படுவதை குறிக்கும்.
💥 இரண்டு வகையான உதவி தேடுதல் உள்ளது.
1⃣ “இஸ்திகாஸா”➖ நெருக்கடியான நேரத்தில் உதவி தேடுதல்.
2⃣ “இஸ்திஆனா “➖ சாதாரணமாக நிலையில் உதவி தேடுதல்.